ஆளும் கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த விமலும் கம்மன்பிலவும்!
SriLanka
Wimal Weerawansha
Udaya Prabhath Gammanpila
By Chanakyan
ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்றையதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர். எனினும், விமல் வீரவங்சவின் கட்சியினைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
அத்துடன், உதய கம்மன்பிலவும் குறித்த கூட்டத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.