விமலின் முன்னாள் ஊடகச் செயலாளர் அதிரடி கைது!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு, அரசு சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிர விசாரணை
விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை முறைக்கேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள், உரிய அனுமதியின்றித் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்துப் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |