யாழில் போதைபொருளுடன் சுற்றி வளைக்கப்பட்ட பெண்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Theepan
யாழில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது உடமையில் இருந்து இரண்டு கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |