கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை
கிளிநொச்சியில் (Kilinochchi) கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றைய தினம் (07) கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணி பகுதியிலுள்ள கிணனொற்றிவிருந்தே மீட்க்ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “சிதம்பரப்பிள்ளை மைல்வாகனம் நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம்
துர்நாற்றம் வீசுவதை அறிந்து நேற்று (07) காலை 09.00 மணியளவில் அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்துள்ளனர்.
குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக காணப்பட்டதை கண்டதையடுத்து, இது தொடர்பில் பளை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலமாக காணப்படும் பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதியென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், பளை காவல்துறையினர் சடலத்தை மீட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்