நுரைச்சோலை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் - கொலையா...!
நுரைச்சோலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியிலேயே இவ்வாறு பெண்ணொருவர் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றவர்கள் இவ்வாறு சடல்மொன்று காணப்பட்டதை அவதானித்த நிலையில் நுரைச்சோலை காவல்துறையினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
கொலையாக இருக்கலாமென சந்தேகம்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுரைச்சோலை காவல்துறையினர் சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் காவல்துறையினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.
இதன்போது சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கறைகள் காணப்பட்டது காவல்துறையினரால் அவதானிக்கப்பட்டது.
இது கொலையாக இருக்கலாமென்று சந்தேகிப்பதாக தடயவியல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.