முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
குறித்த விபத்து சம்பவம் நேற்று மாலை லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பதுளை - மட்டக்களப்பு வீதியின் ஹொப்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது
உயிரிழந்தவர் லுணுகலை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பசறை நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி