பணம் சம்பாதிக்க இளம் குடும்பபெண்ணின் அநாகரிக செயல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
தனது நிர்வாண காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் ஒருவரை செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றப்பிரிவு, ஒரு குழந்தையின் தாயான பெண்ணை, ஆபாச பிரசுர கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் குற்றவியல் சட்டத்தின் 286 வது பிரிவின் கீழ் குற்றங்களைச் செய்ததாகக் கூறி, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தது.
பணம் செலுத்திய நபர்களுடன்
தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய நபர்களுடன் சந்தேக நபர் தனது நிர்வாண காணொளிகளை இணையத்தில் பகிர்ந்து கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நிமிடத்திற்கு ரூ.1,000-க்கு தனது சேவையை அந்த பெண் வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபரின் கணவர், மனைவிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அல்லது உதவி செய்யும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவு
சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அடுத்த விசாரணை தினத்தில் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்கிடமான பெண்ணுக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.