ஈழ விடுதலைக்காக பிள்ளைகளை அர்ப்பணித்து இன்று அவலத்தில் தவிக்கும் மூதாட்டியான தாய்!.. (காணொளி)
Tamil
Batticaloa
People
Eelam
Vavunativu
By Chanakyan
இனத்துக்காகவும் நிலத்துக்காகவும் போராடுவதற்காக தன் மூன்று பிள்ளைகளை கொடுத்த தாய் இன்று காலத்தின் கோரப்பிடியினால் சிக்கி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் தள்ளாடும் வயதிலும் தனது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்காக தண்டு வலித்து (மீன்பிடி) தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரது நிலைமையை இன்று வரையில் அரசாங்கமும் எந்தவொரு தொண்டு நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விடயமே.
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் வசித்து வரும் கனகம்மா (வயது-68) என்ற பெண் முதியவரே இந்த நிலையில் சிக்கியுள்ளார்.
மேலும் தனது மூன்று பிள்ளைகளை மண்ணிற்காக இழந்தமை மட்டுமல்லாது நோய் தாக்கம் காரணமாக கணவனினால் எந்த வேலைகளும் செய்ய முடியாத நிலையில் அவரே பராமரிக்க வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,