ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

India United Arab Emirates Smriti Mandhana
By Aadhithya Jul 21, 2024 03:43 PM GMT
Report

ஆசிய கிண்ண (Asia Cup) ரி20 மகளிர் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில், இந்திய (India) மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி,  இன்றைய (21) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அந்தவகையில், ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கணையான ஷபாலி வர்மா (Shafali Verma) 37 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!

அரை சதம்

அதற்கு பிறகு துடுப்பெடுத்தாடிய ரிச்சா கோஷ் (Risha Ghosh)  64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தநிலையில், அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் (Harmanpreet Kaur)  66 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி | Womens Asia Cup T20 2024 India Vs Uae

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 201 ஒட்டங்களை குவித்தது.

ஆசிய கிண்ண இருபதுக்கு இருபது மகளிர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம்

ஆசிய கிண்ண இருபதுக்கு இருபது மகளிர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம்

வெற்றி இலக்கு

இதையடுத்து, 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில், ஈஷா ரோகித் (Esha Rohit Oza) 38 ஒட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி | Womens Asia Cup T20 2024 India Vs Uae

அதனையடுத்து வந்தவர்களால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியவில்லை எனினும் கவிஷ்கா எகோடகே ( Kavisha Egodage) பொறுப்புடன் ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லங்கா பிரீமியர் லீக் தொடர்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடர்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஜப்னா கிங்ஸ்


அபார வெற்றி

எனினும், இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பினால்  ஐக்கிய அரபு அமீரக அணி சிரமப்பட்டது.

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி | Womens Asia Cup T20 2024 India Vs Uae

அந்தவகையில், இந்திய அணி சார்பில்  பூஜா வஸ்த்ரகர் (Pooja Vastrakar) நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில், ஐக்கிய அரபு அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025