லொட்டரி சீட்டை குப்பையில் வீசியவருக்கு திடீரென அடித்த ஜாக்பாட் -அதிர்ச்சியில் மனிதர்
சிங்கப்பூர் நாட்டில் தான் வாங்கிய லொட்டரி சீட்டை குப்பையில் வீசியிருக்கிறார் ஊழியர் ஒருவர். அந்த டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்ததாக அதிகாரிகள் தொலைபேசி அழைப்பெடுத்து தகவலை தெரிவித்த நிலையில் அந்நபர் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவர் சிங்கப்பூர் ஸ்வீப் லொட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அதன்பிறகு தனது அன்றாட வேலைகளில் அவர் மூழ்கிவிட்டார்.
குப்பைத் தொட்டி

பின்னர் குலுக்கலின் போதும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அடுத்த சில நாட்களில் அவருக்கு லொட்டரி நிறுவன அதிகாரிகள் அழைப்பெடுத்து அவர் வாங்கியிருந்த லொட்டரி டிக்கெட்டிற்கு 23 லட்சம் டொலர் பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தாலும் கொஞ்ச நேரத்தில் பரபரப்பாகிவிட்டார். காரணம் அவர் தனது டிக்கெட்டை குப்பையில் வீசியதே.
பின்னர் தனது வீடு முழுவதும் அவர் தேடியதில் இறுதியாக குப்பைத் தொட்டியில் தேடும்போது ஜாக்பாட் டிக்கெட்டை கண்டுபிடித்திருக்கிறார்.
வாழ்வில் ஒருபோதும் அடிக்காத ஜாக்பாட்

இதுகுறித்து அவர் பேசுகையில்,"எனக்கு வாழ்வில் எப்போதுமே ஜாக்பாட் அடித்ததில்லை. அதனாலேயே நம்பிக்கை இழந்து அந்த டிக்கெட்டை குப்பையில் வீசிவிட்டேன்.
ஆனால், அதிகாரிகள் எனக்கு அழைப்பெடுத்து விபரத்தை கூறியதும் நான் அதிர்ந்துவிட்டேன். நல்லவேளையாக அந்த அதிஷ்ட டிக்கெட் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது' எனத் தெரிவித்திருக்கிறார்