வலுவடையும் மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் - எச்சரித்த வளிமண்டளவியல் திணைக்களம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு வடகிழக்கே 300கிமீ) "மண்டூஸ்"என பெயரிடப்பட்ட சூறாவளி புயல் இன்று காலை 08.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவில் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியுடன் இடையிடையே மழை கிடைக்கப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த காலநிலை மாற்றத்தால் கடந்த 24 மணிநேரத்துக்குள் இலங்கையின் பல பிரதேசங்களில் பொதுமக்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.
நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்

நீர்வேலி,கரந்தன்,நவக்கிரி மற்றும் கோப்பாய் பகுதிகளில் வாழைச்செய்கை பாதிப்பு


அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

