திடீர் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல்: 8 ஆம் நாளாக தொடரும் யுத்தம்
காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடங்கங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிற்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடும் போர் இடம்பெற்று வருகிறது, அதில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் இராணுவம் தக்க பதிலடி வழங்கி வருகிறது.
மீண்டும் தாக்குதல்
இந்நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு காசா பகுதியில் துப்பாக்கி படகுகள் மற்றும் டாங்கிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் பீரங்கி எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் இருந்து பயணக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் காசா எல்லையில் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.