மர்மங்கள் நிறைந்த உலகின் இறுதி சாலை பற்றி உங்களுக்குத் தெரியுமா!
சாலைகளால் வேறுபிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்படும் இந்த உலகின் கடைசி சாலை எங்கே இருக்கிறது என்று தெரியுமா, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தினை வேறுபிரித்து அறிந்து கொள்வதற்கும் அனைவருக்கும் ஆதாரமாக விளங்குவது நிச்சயமாக சாலை தான்.
அந்த சாலை மண்ணாலானதாய் இருந்தாலும் சரி செப்பனிடப்பட்ட சாலையாக இருந்தாலும் சரி மக்களுக்கு போக்குவரத்திற்கும் ஓர் இடத்தை அடையாளம் காணவும் உதவுவது சாலை தான்.
அந்த வகையில், இந்த உலகில் உள்ள ஏராளமான சாலைகளில் இறுதி சாலை எங்கே முடிவடைகிறது என்பதை புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், ஐரோப்பாவின் நார்வேயில் அமைந்துள்ள ‘E-69 நெடுஞ்சாலை’ தான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீளமான சுரங்கப்பாதை
இந்நிலையில் இந்த அரிய இடத்தை காண உலகின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தவண்ணம் இருக்கின்றனர், பூமத்தியரேகைக்கு மேலே அமைந்துள்ள இந்த சாலை தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்ட்கப் ஐ நார்வேயில் உள்ள ஓல்டபிவூர்ட் கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை சுமார் 129 கி.மீ. தூரத்தை கொண்டுள்ளது.
இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை ‘நார்த் கேப்’ ஆகும். ‘நார்த் கேப்’ 6.9 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த ‘நார்த் கேப்’ சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது, முடிந்தவரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.
சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்த சாலையில் செல்ல சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது, ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந்த சாலையில், காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். கோடை காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என கூறப்படுகிறது. தவிரவும், வானிலை முன்னறிவிப்புகள் இந்த பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும் என்பதால் இங்கு யாரும் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகள் ஆனது என்றும், 1992இல் நிறைவு பெற்ற பிறகு பொதுமக்கள் பார்வைக்காக இது அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |