ஆசியாவின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடு எது தெரியுமா...!
ஆசியாவின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா பதிவாகியுள்ளது.
இதன்படி, சீனாவின்சதுப்பு நிலப்பரப்பு 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளதாக சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா விளங்குவதோடு, உலகளாவிய ரீதியில் 4 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
சதுப்பு நில தினம்
இன்று உலகின் 28 ஆவது உலக சதுப்பு நில தினமாகும்.
Today marks the 28th World Wetlands Day. In recent years, China has made continued efforts to complete the building of over 2,200 wetland nature reserves, data from China’s Ministry of Forestry and Grassland showed. The data also released that China’s total wetland area hit… pic.twitter.com/LJtQRSpSoQ
— China News 中国新闻网 (@Echinanews) February 2, 2024
சதுப்பு நிலம் மற்றும் மனித குலத்தின் நன்மை” என்பது இந்த ஆண்டுக்கான சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாகும்.
உலகில் 903 தேசிய சதுப்பு நிலப் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்பு திட்டங்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில், சீனாவில் சுமார் 3400 சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 8 லட்சம் ஹெக்டர் சதுப்பு நிலங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |