அபாய எச்சரிக்கை - உலகில் 2030 ஆண்டுக்குள் 560 பேரிடர்கள்
World Population Day
Climate Change
Weather
World
Disaster
By Thulsi
2030 ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச பேரிடர் அபாயம்
2030 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி