உலக யோகா சாம்பியன்ஷிப் 2026இல் இலங்கை அணிக்கு இரண்டாம் இடம்
Sri Lankan Tamils
India
By H. A. Roshan
இந்தியாவின் பெங்களூருவில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.
இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று குறித்த சாதனையை படைத்துள்ளனர்.
இதன்படி இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி