உலகின் மிக உயரமான கால்பந்து மைதானத்தை அமைக்கும் நாடு
சவுதி அரேபியா (Saudi Arabia) தனது தொலைநோக்கு திட்டமான 'விஷன் 2030'-இன் கீழ், உலகிலேயே மிகவும் உயரமான கால்பந்து மைதானத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது.
வானை முட்டும் கட்டடங்களுக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான பெயர் போன நாடான கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த மாபெரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்த கால்பந்து மைதானம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியோம் ஸ்டேடியம்
நியோம் பகுதியில் தரையில் இருந்து 350 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மைதானம் 46,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க செளதி திட்டமிட்டுள்ளது.
2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 42 நிமிடங்கள் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்