வெளியானது உலக பணக்காரர் பட்டியல் :முதலிடத்தில் யார் தெரியுமா..!
ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.
தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியனர்களை கொண்டுள்ளன.
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் எலோன் மஸ்க்
342 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.
ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கடந்தாண்டு 116 பில்லியன் டொலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டொலராக குறைந்துள்ளதால் அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 28வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் அநுர அரசு : மோடி வருகையுடன் கைச்சாத்திடப்படவுள்ள பல்வேறு ஒப்பந்தங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
