உலகின் உயரமான அம்பேத்கர் சிலை...!
விஜயவாடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 125 அடி உயர டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை நாளை (19) திறந்து வைக்கப்படவுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இந்த சிலையை திறந்து வைக்கவுள்ளார்.
உலகின் மிக உயரமான 50 சிலைகளில், அம்பேத்கர் சிலையும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலை
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில் உள்ள அம்பேத்கர் ஸ்மிரிதி வனத்தில், 81 அடி பீடத்தின் மேல் 125 அடி உயரத்தில் இந்த உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 18.81 ஏக்கர் பரப்பளவில், 404.35 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த 125 அடி சிலை எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிலையின் சிறப்பம்சம்ங்கள்
சிலையின் பீடம், பௌத்த கட்டடிக் கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டள்ளது.
பீட பகுதி மட்டும் 11,140 கன மீட்டர் கான்க்ரீடாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்கள் பூச்சுக் கொண்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தின் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள் உள்ளன. மையத்தில் ஓர் இசை செயற்கை நீரூற்றும் உள்ளது.
அத்துடன், சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு அரங்கம், உணவு அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நீர் நிலைகளை, இசை நீரூற்று, நடைபாதைகள் ஆகியவை அமைந்துள்ளன.
சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்
மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்தச் சிலை “சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்” என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வர்ணித்துள்ளார்.
இதேவேளை, டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானாவில், அம்மாநில முதல்வராக இருந்த கே.சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |