முற்றாகச் சேதமான எக்ஸ்பிரஸ் பேர்ளின் இறுதிக் காணொளி
colombo
fire-accident
x-press-pearl
By Vanan
இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த எக்பிரஸ் பேர்ள் எனும் வெளிநாட்டுக் கப்பலில், முற்றாக தீயணைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுக கடற்பரப்புக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி தீப்பற்றிக் கொண்ட சிங்கப்பூர் நாட்டுக் கொடியுடனான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில், கடந்த பல நாட்களாக தொடர்ந்தும் தீ எரிந்து வந்தது.
இதனைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் கடல் சுற்றுச்சூழல் சேதத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட வஜ்ரா (ICGS Vajra) மற்றும் விபாவு (ICGS Vaibhav) என்ற இரண்டு கப்பல்களும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
முற்றாக தீயணைந்து இறுதிநிலையில் உள்ள "எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பலின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்