யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற யாழ்தேவி தடம்புரண்டது
Jaffna
Train Crash
By Sumithiran
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த யாழ்தேவி கடுகதி புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் மஹவ நிலையத்திற்கு அருகிலேயே தடம்புரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து
இதனால் வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று பகல் ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி