யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Colombo Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Attorney General
By Sathangani Jun 04, 2026 06:25 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை, மீண்டும் ஜூலை மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கின் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவொன்று நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை ஜூன் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு!

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு!

சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கு  

அன்றைய தினம் வரை இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்யப்போவதில்லை என நாடாளுமன்றத் தரப்பு (முறைப்பாட்டாளர்கள்) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதற்கமைய இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்றி வழக்கை ஒத்திவைக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Yoshitha Rajapaksa S Money Laundering Case

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை இந்த வழக்கை ஜூலை மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.

730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஐந்து காணித் துண்டுகளை முறையற்ற வழிகளில் கையகப்படுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் - வைரலான காணொளியால் சிக்கிய குடும்பம்

16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் - வைரலான காணொளியால் சிக்கிய குடும்பம்

கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளர்! நீதிமன்றில் அம்பலம்

கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளர்! நீதிமன்றில் அம்பலம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015