யோஷித ராஜபக்சவுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Sri Lanka Navy Yoshitha Rajapaksa
By Sathangani Jun 17, 2026 10:31 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நான்காம் இணைப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்சவுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Yoshitha Rajapaksa To Appear Before Ciaboc Today

மூன்றாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   


இரண்டாம் இணைப்பு

யோஷித ராஜபக்ச வாக்குமூலம் அளிப்பதற்காக சற்று முன்னர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யோஷித ராஜபக்சவுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Yoshitha Rajapaksa To Appear Before Ciaboc Today

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர் நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால் அவரால் முன்னிலையாக முடியாது என்று ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

முன்னாள் கடற்படை தளபதிக்கும் அழைப்பு

இதனையடுத்து, விசாரணைகளுக்காக இன்று முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

யோஷித ராஜபக்சவுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Yoshitha Rajapaksa To Appear Before Ciaboc Today

இதேவேளை குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அழைப்புக்கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படை தளபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025