அதிபர் ரணிலிடம் இளம் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(ranil wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பரபரப்பாக பேசப்படும் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ள நிலையிலேயே இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ரணிலுக்கு தொலைபேசியில் அழைப்பு
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம்
எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |