வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இளைஞர் யுவதிகள் - காரணத்தை வெளியிட்ட அரசாங்கம்
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் வரிசையில் காத்திருப்பது நல்ல விடயமே என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கியதனால் இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வரிசையில் நிற்கின்றனர்.
இந்த அரசாங்கம் கூடுதலான வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியதனால் தான் இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஜப்பான், இஸ்ரேல், கொரியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மக்கள் மத்தியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதற்காக இளைஞர் யுவதிகள் வரிசையில் காத்திருப்பது பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது'' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.