போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை
Gampaha
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொலன்னாவவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மூன்று போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய காவல் நிலையத்திற்கு நேற்று மாலை (14) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்தப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் குழுவினால் கொலன்னாவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவிற்கான பணத்தை செலுத்துவதற்காக இந்த போலி 5,000 ரூபாய் நாணயத்தாளை பயன்படுத்த முயன்றது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
பணத்தின் மீது சந்தேகம் கொண்ட உணவக உரிமையாளர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்