நுவரெலியாவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை
Sri Lanka Police Investigation
Crime
By Pavi
கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று (15.09.2026) இரவு சுமார் 11 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தை இனம்கண்ட பொதுமக்கள் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரம்பொட மற்றும் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி