வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்!
வவுனியாவில் எலிக்காய்ச்சல் தாக்கியதன் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினம் (31) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சிகிச்சை அளிக்கப்பட்டது
"செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களாக காய்ச்சல் தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது.
இதனையடுத்து அவரை செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனளிக்காத நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளார்." என கூறப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தைச் சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |