உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன் போர்! பற்றி எரியும் ரஷ்யா - ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் தலைநகர் கீவ்வில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மடாலயத்தைச் சேதப்படுத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்யா மீது உக்ரைன் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன்படி, இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தால் ரஷ்ய தலைநகர் மொஸ்கோ பற்றி எரியும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு மொஸ்கோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஆளின்லா விமானத் தாக்குதல்களில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்யத் தலைநகரின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.
மொஸ்கோவுக்கு எச்சரிக்கை
இது குறித்து ஜெலென்ஸ்கி, "இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பியதில்லை; இது உலகிற்கும் எங்களது கூட்டாளிகளுக்கும் தெரியும். ஆனால் உக்ரைன் எரிந்தால், உங்கள் மொஸ்கோவும் எரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில்தான் 1,000 ஆண்டுகள் பழமையான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா (Kyiv Pechersk Lavra) மடாலயம் சேதமடைந்தது.
புடினுக்கு அழுத்தம்
இந்த நிலையில், நேட்டோ கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி விளாடிமிர் புடினை நிர்ப்பந்திக்கும் வகையில், ரஷ்யாவின் பாதுகாப்பு, எரிசக்தித் துறைகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீது தடைகளை விதித்து அழுத்தத்தை அதிகரிக்குமாறு ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்போது, உக்ரேனியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ரஷ்யர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து புடின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |