உக்ரைனுக்குக் குவியும் புதிய இராணுவ உதவி: ஜெலென்ஸ்கியின் திடீர் பெர்லின் பயணம்
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் ஐரோப்பியப் பிராந்தியப் பாதுகாப்பு, உக்ரைனுக்கான மேலதிக இராணுவ உதவிகள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புச் சவால்கள் குறித்து இரு தலைவர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
வதந்திகள்
ஜெலென்ஸ்கியின் பெர்லின் வருகை குறித்த வதந்திகள் பரவிய நிலையில் தொழில் துறை உச்சிமாநாட்டில் உரையாற்றிய மெர்ஸ் இச் சந்திப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் குளிர்கால நிதியுதவிகள் குறித்து இச் சந்திப்பில் முதன்மையாகக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |