வனிந்துவின் சுழலில் சிக்கி சிதறியது சிம்பாப்வே : தொடரை வென்றது இலங்கை அணி
இலங்கை வந்த சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வனிந்து ஹசரங்கவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான சிம்பாப்வே அணி படுதோல்வியடைந்த நிலையில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி இன்று இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஹசரங்க சுழலில் மாயாஜாலம்
சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு 27 ஓவர்களில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
குறுக்கிட்ட மழை குறைக்கப்பட்ட ஓவர்
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக
இந்த போட்டித் தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசங்க தொடர் நாயகனாக ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |