ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி
ரி 20 உலக கிண்ண தொடரின் இன்று (26) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர்.
ஓட்டங்களை குவித்த இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா 55 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களையும், திலக் வர்மா 16 பந்துகளில் 44 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தனர்.

பதிலுக்கு 257 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடு்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்து.
சிம்பாப்வே அணி சார்பில் பிரைன் பெனட் இறுதிவரை அதிரடியாக ஆட்டமிழக்காமல் துடுப்பாடி 59 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |