“டித்வா” பேரிடரை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 12 பேர் கைது!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று சொத்துக்களை கொள்ளையடித்த 12 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் F.U வுட்லர் தெரிவித்தார்.
பத்தரமுல்லை சுகுருபாயவில் இன்று (09.12.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வீடுகளில் கொள்ளை
“டித்வா” புயலின் தாக்கம் நாடளாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு எச்சரிக்கை காரணமாக மக்கள் சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 2570 பேர் அதில் உயிரிழந்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |