இலங்கைக்கு வந்து குவிந்த ஒரு இலட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள்
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் 1,845,164 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த நிலையில் அந்த எண்ணிக்கை 410,382 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே சுற்றுலாத் துறையில் வசதிகளை மேம்படுத்த ஒரு முறையான திட்டத்தை துரிதமாகத் தயாரிக்க வேண்டும் என்று அதன் தலைவர் சமீர சேனக டி சில்வா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்