13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிபர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து தொடரும் விமர்சனங்கள்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக அதிபர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அவ்வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.