இலங்கை அரசியலமைப்பிற்கு சாபக்கேடான 13 - சரத்வீரசேகர கோபாவேசம்
இலங்கையின் அரசியலமைப்புக்கு ஒரு சாபக்கேடான சட்டமாக 13 ஆவது திருத்தம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே அதனை இல்லாதொழிக்க தான் முழுமையான ஆதரவை வழஙகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரணிலின் அறிவிப்பு
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் 22 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து 13ஐ இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்றும் இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிபரின் அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை
அத்துடன் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தெரிவித்ததைப் போல அதை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தால் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஏனெனில் சிக்கலுக்குரிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.