வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்: சுற்றிவளைப்பில் சிக்கிய 14 பேர்
ஹிங்குராக்கொட காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிங்குராக்கொட தலைமையகப் காவல்துறையினர்மற்றும் ஹிங்குராக்கொட இலங்கை விமானப்படை முகாம் அதிகாரிகள் இணைந்து நடத்திய விசேட கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (02-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மின்னேரியாவையும், 3 பேர் ஹிங்குராக்கொடவையும், 2 பேர் மெதிரிகிரியாவையும் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்களில் 13 பேர் ஹேரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹிங்குராக்கொட, 6 ஆம் மைல் post பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர், வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஹேரோயின் விநியோகம் செய்யும் பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் இன்று (03-10-206) ஹிங்குராக்கொட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |