அரை நூற்றாண்டிற்குள் 154 மில்லியன் உயிர்களை காப்பாற்றியுள்ள தடுப்பூசிகள்!
கடந்த 50 வருடங்களுக்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு, த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி 1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகள்
இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே அதிக நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விகிதம்
அதற்கமைய, பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 104 மில்லியன் குழந்தைகளே உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தடுப்பூசி திட்டமானது குழந்தைகள் இறப்பு விகிதத்தில் 40 வீத வீழ்ச்சியினையும் ஏனையவர்களின் இறப்பு விகிதத்தில் 60 வீத வீழ்ச்சியையும் காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |