ஆசிரியர் வெற்றிடத்திற்கான வர்த்தகப் பிரிவு பட்டதாரிகள் நியமனம்: சஜித் விடுத்துள்ள கோரிக்கை
மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் குறிப்பிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வர்த்தக பட்டதாரிகளுக்கு நியமனம்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுமார் 6000 வெற்றிடங்களில் 2951 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |