நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் இன்று (26) அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாளின் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நீதிமன்றத்தை அவமதித்தமை
அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து குறிப்பிட்ட சில கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பை அல்லது கட்டளையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்தக் குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது… 28 நிமிடங்கள் முன்