வடக்கு,கிழக்கு உட்பட22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த வலயங்களாக பிரகடனம்
Sri Lanka Government Gazette
Floods In Sri Lanka
Cyclone
By Sumithiran
டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தின்படி நாடு முழுவதும் பல நாட்களாக பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் பாதகமான வானிலையால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வருமாறு,
கண்டி நுவரெலியா பதுளை குருநாகல் மாத்தளை கேகாலை கம்பகா முல்லைத்தீவு அனுராதபுரம் கொழும்பு யாழ்ப்பாணம் பொலனறுவை மன்னார் புத்தளம் இரத்தினபுரி மொனராகலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கிளிநொச்சி வவுனியா களுத்துறை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
6 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி