சிறிலங்கா காவல்துறையினரிடம் சிக்கிய 24 வயது இளைஞன்!
steal
stealing motorcycles
By Kanna
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 மோட்டார் சைக்கிள்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், வல்லவ, பொதுஹர, நிட்டம்புவ, வெலிவேரிய, வரகாபொல, ஜா-எல, வெயங்கொட மற்றும் பலியகொட ஆகிய பகுதிகளில் திருடப்பட்ட 14 மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கட்டுநாயக்க காவல் நிலைய அதிகாரிகள் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் குருநாகல் மாவட்டம் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் கட்டுநாயக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்