கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை, சமூக சேவைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டிற்காக சுகாதார அமைச்சின் நிறுவனங்களால் மட்டும் 3,371.05 மில்லியன் ரூபாய் அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (14) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த ஒதுக்கப்பட்ட நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்ற மதிப்பாய்வு
இதில், மாகாண சுகாதார சேவைகள் துறை, சுதேச ஆயுர்வேத மருத்துவத் துறை, சமூக சேவைகள் துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர்கள்கள் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் திட்ட முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்குமாறு ஆளுநர் நிறுவனத் தலைவர்களுக்கு இதன் போது அறிவுறுத்தியுள்ளார்.
நிகழ்வில் மாகாணசுகாதார அமைச்சின் செயலாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் பங்கு பற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்
