கனடாவிற்கு பேரிடி: 35 வீத மேலதிக வரி விதிப்பை அறிவித்தார் ட்ரம்ப்
ஓகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து(canada) இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) அறிவித்துள்ளாா்.
இது குறித்து கனடா பிரதமா் மாா்க் காா்னிக்கு எழுதிய கடிதத்தில், ஃபென்டானில் போதைப் பொருள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க கனடா போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும், அந்த போதைப் பொருளின் பரவலை தடுக்க கனடா ஒத்துழைத்தால் இந்த கூடுதல் வரி விதிப்பு மறு ஆய்வு செய்யப்படலாம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
கனடா பிரதமா் மாா்க் காா்னிக்கு எழுதிய கடிதம்
ஆனால் கனடா அதிகாரிகளோ, அமெரிக்காவுக்குள் கடத்தப்படும் ஃபென்டானில் அளவு மிகவும் சொற்பமானது என்று தெரிவித்தனா்.
இதற்கு முன்னா், கனடாவிலிருந்து இறக்குமதியாகும் காா்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் 25 சதவீத கூடுதல் வரியும், கனடா நாட்டு உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியும் ட்ரம்ப் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
