16,000 பேருக்கு பதிலாக 36,000 பேர் அடைப்பு : சிறைச்சாலைகளில் பெரும் நெருக்கடி
நாடு முழுவதும் உள்ள சிறைகளின் கொள்ளளவு 15,959 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 36,200 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகியுள்ளன.பல சிறைகளில் தோல் நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்கள் பரவலாகிவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறைகளில் குறைக்கப்பட்ட கைதிகள்
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 43,000 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர், ஆனால் அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று சிறைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்துவதன் மூலம் சமீபத்தில் சுமார் ஐந்தாயிரம் கைதிகள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக, திணைக்களத்தின் அதிகாரிகள் இரவு 10:00 மணி வரை பணியாற்றுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |