ஒதியமலை படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் (நேற்று) 02.12.2025 உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில குறித்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
உணர்வுபூர்வமாக அஞ்சலி
அந்தவகையில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.கிரிதரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி - தவசீலன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







