முன்னாள் எம்.பி உள்ளிட்ட பலர் கைது - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
பண்டாரவளை, பொரலந்தை பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட ஐவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் பண்டாரவளை, பொரலந்தை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலும் சிலரை கைது செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லையென இதன்போது நீதிமன்றம் அறிவித்துள்ளது.