51 காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு
Sri Lanka Police
Sri Lanka
Inspector General of Police
By Raghav
சிறிலங்கா (Sri Lanka) காவல்துறையின் 51 காவல்துறை பரிசோதகர்கள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
போட்டி பரீட்சையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா காவல்துறை
இதற்காக உப காவல்துறைபரிசோதகர், காவல்துறை பரிசோதகர் மற்றும் தலைமை காவல்துறை பரிசோதகர்கள் ஆகிய தரங்களில் சேவையாற்றியவர்களும் அடங்குகின்றனர்.
3 பெண் காவல்துறை பரிசோதகர்களும், 2 காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 10 மணி நேரம் முன்
