பயணச்சீட்டை வழங்க மறுத்த பேருந்து நடத்துனர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத குற்றச்சாட்டின் கீழ் மேல் மாகாணத்தில் 57 பேருந்து நடத்துனர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடத்தை மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆணையத்தின் தலைவர் காமினி ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி பட்டறை
இடைநீக்கம் செய்யப்பட்ட நடத்துனர்களுக்கு மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையம் ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் தங்களுக்கான பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த காலகட்டத்தில், மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையம் கிட்டத்தட்ட 500 பேருந்துகளை ஆய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
