இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Tsunami
Indonesia
Earthquake
World
By Sathangani
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (16) காலை10.27 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோ மீற்றர் தொலைவில், 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகிவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுனாமி ஏற்படும் அபாயம்
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடியாக உயிர்சேதம் அல்லது பெரிய அளவிலான பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்தோனேசியா, பசுபிக் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்